தடகளத்தில் ஊக்கமருந்து மற்றும் முறைகேடுகளை களையும் புதிய சீர்த்திருந்தங்களுக்கு சர்வதேச கூட்டமைப்பு அனுமதி

விளையாட்டில் ஊக்கமருந்து மற்றும் ஊழலைக் களைய வடிவமைக்கப்பட்ட புதிய சீர்த்திருந்தங்களுக்கு தடகள சங்கத்தின் தலைவர் அனுமதி வழங்கியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தடகள கூட்டமைப்புகளின் சர்வதேச சங்கத்தின் தலைவர் லார்ட் கோ

தடகள கூட்டமைப்புகளின் சர்வதேச சங்கத்தின் தலைவர் லார்ட் கோவின் பரிந்துரைகளை ஆரவாரமாக வரவேற்று, இது மாற்றத்திற்கான நேரம் என்று மோனாக்கோவில் நடைபெற்ற தடகள கூட்டமைப்புகளின் சர்வதேச சங்கத்தின் சிறப்பு மாநாடு ஒன்றில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

நன்கு அறியப்படும் வீரர்கள் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கும் போது அதைப்பற்றி விசாரிக்க பெரிய தன்னிச்சையான புதிய குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.

தற்போது பிரான்ஸில் குற்றவியல் நடைமுறையை சந்தித்து வருபவரும், இதற்குமுன் சங்கத்தின் தலைவர் பதவியை வகித்தவருமான லமைன் டியக் கீழ் நடைபெற்றதாக சொல்லப்படும் முறைகேடுகளை நினைத்து அவர்கள் வருத்தப்பட வேண்டும் என்று மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதிகளிடம் லார்ட் கோ கூறினார்.

ரஷ்ய தடகள வீரர்களுக்கு எதிரான தடையை ஒத்திவைக்க லமைன் டியக் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்