2016-ஆம் ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்றார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

கடந்த ஆண்டுக்கான (2016) சிறந்த கால்பந்தாட்ட வீரராக போர்ச்சுக்கல் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளின் பிரபல வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஃ பிஃ பா (சர்வதேச கால்பந்து சம்மேளனம்) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2016-ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருது பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ

அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா அணியின் மெஸ்ஸி மற்றும் அட்லெட்டிகோ மாட்ரிட் அணியின் ஆண்ட்வான் கிரிஸ்மேன் ஆகியோரை பின்னுக்கு தள்ளி 31 வயதான ரொனால்டோ முதலிடத்தை பிடித்துள்ளார்.

முன்னதாக, இந்த ஆண்டிற்கான பாலோன் டோர் விருது கடந்த டிசம்பரில் அவருக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.

போர்ச்சுக்கல் அணிக்காகக் சாம்பியன்ஸ் லீக் பட்டம் மற்றும் ரியல் மாட்ரிட் அணிக்காக யூரோ கோப்பையை வென்றதற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இந்த விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த கார்லி லாயிடு என்ற கால்பந்தாட்ட வீராங்கனைக்கு சிறந்த பெண் வீராங்கனைக்கான ஃ பிஃ பா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கார்லி லாயிடு

2016-ஆம் ஆண்டில் தான் விளையாடிய 44 போட்டிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 42 கோல்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்