ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் வென்று ஃபெடரர் சாதனை

படத்தின் காப்புரிமை EPA

மூத்த நட்சத்திர ஆட்டக்காரர் ரோஜர் ஃபெடரரும், ராஃபேல் நடாலும் இன்று மோதிய ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் போட்டியில் ஃபெடரர் வெற்றி பெற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த போட்டியில் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரேலிய ஓபன் கோப்பையை ஃபெடரர் வென்றுள்ளார்.

இந்த போட்டியில் பங்கேற்ற ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும், ஸ்பெயினின் ரஃபேல் நடால் 14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றவர்கள்.

1974 ஆம் ஆண்டுக்கு பிறகு கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டியில் விளையாடிய மூத்த வீரர் என்ற பெருமையை 35 வயதில் இந்த போட்டியில் விளையாடியுள்ள ரோஜர் ஃபெடரர் பெற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை EPA

ஆஸ்திரேலிய ஓபனில் 2009-இல் ஃபெடரரை வீழ்த்தியே நடால் முதல்முறையாக பட்டம் வென்ற பின்னர், 4-ஆவது முறையாக இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் விளையாடியுள்ளார்.

நடாலும், ஃபெடரரும் இதுவரை 8 கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில் மோதியுள்ள நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு 9-வது முறையாக இந்த போட்டியில் நேருக்கு நேர் போட்டியிட்டு விளையாடியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

முன்னர் மோதிய 8 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் இறுதிச் சுற்றுகளில் நடால் 6 முறையும், ஃபெடரர் 2 முறையும் வெற்றி கண்டுள்ளனர்.

இந்த இறுதிச்சுற்றில் ஃபெடரர் வென்றிருப்பதால் 18-ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். அதே நேரத்தில் ஆஸ்திரேலிய ஓபனில் 5-ஆவது பட்டத்தைக் கைப்பற்றியவராகவும் மாறியுள்ளார்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக கிராண்ட் ஸ்லாம் போட்டியில் ஃபெடரர் பட்டம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்