பிசிசிஐயின் புதிய தலைவராக வினோத் ராய் நியமனம்

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை நெறிப்படுத்தி நடத்தும் அமைப்பின் நிர்வாகப் பொறுப்புக்கு நான்கு பேர் கொண்ட புதிய குழுவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிசிசிஐ நிர்வாக குழுவின் தலைவராக வினோத் ராய் நியமனம்

பிசிசிஐ என்று அறியப்படும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகக் குழுவின் புதிய தலைவராக, இந்தியாவின் தலைமை 'கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியாக' இருநத வினோத் ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.

வினோத் ராயை தவிர புதிய நிர்வாகிகளாக புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும் கிரிக்கெட் விளையாட்டு குறிதது தொடர்ந்து எழுதிவரும் ராமச்சந்திர குஹா, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டயானா எடுல்ஜி, மற்றும் ஐடிஃஎப்சி நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விக்ரம் லிமாயே ஆகியோரை உச்சநீதிமன்றம் நியமனம் செய்துள்ளது.

நீதிபதி லோதா தலைமையிலான குழுவினர் அளிதத மறுசீரமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதால், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து அனுராக் தாகூர் விலக வேண்டும் என்று ஜனவரி 2ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

படத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption அனுராக் தாகூர்: அதிகாரம் பறிப்பு

கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பிரீமியர் லீக் போட்டிகளில் சூதாட்டம் நடந்ததாக எழுநத குற்றச்சாட்டுகளை அடுத்து, கிரிக்கெட் வாரியத்தில் பல மாற்றங்களை கொண்டு வர உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது.

பிசிசிஐ செயலர் அஜெய் ஷிரிகேவும் பதவி விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆனால் லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுதத பிசிசிஐ தயக்கம் காட்டியது.

இதனிடையே, புதிதாக நிர்வாகிகளை நியமிக்க உச்சநீதிமன்ற குழு அமைக்கப்பட்டது. அதன் மூலம் பரிந்துரைக்கப்பட்ட சிலர் 70 வயதை கடந்திருநத நிலையில் அதை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்