மத்திய கிழக்கு நாடுகளில் இரானின் ஈடுபாடு மாறுமா?

மத்திய கிழக்கு நாடுகளில் இரானின் நடத்தையை மாற்றுகின்ற புதிய உத்தியை செயல்படுத்தும் நேரம் வந்துவிட்டது என்று சௌதி அரேபிய ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இராக், சிரியா மற்றும் ஏமன் போன்ற நாடுகளில் இரானின் ஈடுபாடுகளும் நோக்கங்களும் முக்கியமானதொரு அச்சுறுத்தலாக தளபதி அகமத் அஸ்சிரி விவரித்திருக்கிறார்,

இரான் "அதனுடைய எல்லைகளுக்கு கொண்டுவரப்பட" வேண்டும் என்று அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மை சுன்னி முஸ்லீம் நாடான சௌதி அரேபியாவுக்கும், ஷியா முஸ்லீம் நாடான இரானுக்கும் இடையிலான நீண்ட போட்டி, இரான் சமீபத்திய ஆண்டுகளில் கசப்பானதாக வளர்ந்து வந்துள்ளது,

இரான் மீது கடும்போக்கை எடுக்கப்போவதாக வாஷிங்டனிலுள்ள டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாகம் சமிக்கை அனுப்பியுள்ள நிலையில் தளபதி அஸ்சிரியின் இந்த கூற்று வந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்