அசாதரணமான சூழ்நிலையால் பிரிட்டன் டென்னிஸ் அணி காலிறுதிக்கு தகுதி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கனடா வீரர் நடுவரின் கண்ணில் தாக்கியதால், பிரிட்டன் டென்னிஸ் அணி காலிறுதிக்கு தகுதி

பிரிட்டன் மற்றும் கனடா டென்னிஸ் அணிகள் இடையில் நடைபெற்ற டேவிஸ் கோப்பைக்கான ஆட்டத்தில், கனடா விளையாட்டு வீரர் ஒருவர், நடுவரின் கண்ணில் டென்னிஸ் பந்தை அடித்து காயமுற செய்த அசாதரணமான சூழ்நிலையால் பிரிட்டன் அணி காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கனடாவுக்காக முதல்முறைாக டேவிஸ் கோப்பையில் டெனிஸ் ஷாபோவாலோவ் விளையாடியுள்ளார்

ஒட்டவாவில் பிப்ரவரி 5 ஆம் தேதி இரவு நடைபெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆட்டத்தின்போது, பிரிட்டனின் கைல் எட்மண்ட்ஸின் பந்தை 17 வயதான கனடா வீரர் டெனிஸ் ஷாபோவாலோவ் சந்தித்தபோது, அது கோட்டுக்கு வெளியே விழுந்த கோபத்தில் கையில் இருந்த பந்தை தூக்கி வெளியே அடித்தார்.

அது நடுவராக இருந்த பிரையின் இயர்லியின் இடது கண்ணை சரியாக பதம் பார்த்தது. இதனால், கனடா அணி இந்த ஆட்டத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக நடுவர் அறிவித்தார்.

இதனால், டேவிஸ் கோப்பை முதல் சுற்று ஆட்டத்தில், பிரிட்டன் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.

ஏப்ரல் மாதம் பிரான்ஸில் நடைபெறும் காலிறுதிச்சுற்றில் பிரிட்டன் பிரான்ஸூக்கு எதிராக ஆடவுள்ளது.

இந்த டென்னிஸ் ஆட்டத்தின் முக்கியமான தருணத்தை காணொளியாக வழங்குகின்றோம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்