அந்தரத்தில் ஐந்து பல்டிகள்: புதிய உலக சாதனை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அந்தரத்தில் ஐந்து பல்டிகள்: புதிய உலக சாதனை

பனிச்சறுக்கு விளையாட்டில் புதிய உலக சாதனை படைத்திருக்கிறார் ஆண்ட்ரி ரகெட்லி.

சுவிட்சர்லாந்தைச்சேர்ந்த பனிச்சருக்கு விளையாட்டு வீரர், சுமார் 35 மீட்டர் உயரத்தில் வானில் பறந்தபடி ஐந்துமுறை சுழன்றார்.

அவர் அந்தரத்தில் அடித்த ஐந்து பல்டிகளில் அவரது தலை நான்கு முறை கீழே வந்து மேலெழும்பியது.

“இது மயிர்க்கூச்செரியும் அனுபவம். வானில் தலைகீழாக சுற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. அப்படி சுற்றியபடி நிலத்தில் பாதுகாப்பாக வந்து சேர்ந்தது அதைவிட மகிழ்ச்சியான அனுபவம்”, என்கிறார் தொழில்முறைசாரா பனிச்சருக்கு விளையாட்டு வீரர் ஆண்ட்ரி ரகெட்லி.