சாக்க்ஷி மாலிக்கின் திருமணத்திற்கு மோதிக்கும், கோலிக்கும் அழைப்பு

2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கம் பெற்றுத்தந்த மல்யுத்த வீராங்கனை சாக்க்ஷி மாலிக்கின் திருமணம் மல்யுத்த வீர்ர் சத்யவிரத் காதியானுடன் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ள, பிரதமர் நரேந்திர மோதி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சாக்க்ஷி அழைப்பிதழ் அனுப்பியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Shankar Mourya/Hindustan Times via Getty Images

"திருமண அழைப்பிதழ்களை பல பிரபலங்களுக்கு அனுப்பியிருக்கிறோம். அவர்களில் யார் வருவார்கள் என்ற தகவல்களை ஹரியாணா மாநில நிர்வாகம் சனிக்கிழமையன்று உறுதிப்படுத்தும்" என்று சாக்க்ஷியின் தாயார் சுதேஷ் மாலிக், பி.பி.சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறினார்.

படங்களில்: இந்திய மல்யுத்தம்

வெள்ளிக்கிழமையன்று மருதாணி வைக்கும் சடங்கு விமரிசையாக நடைபெற்றதாகவும், சனிக்கிழமையன்று வேறு பல திருமண சடங்குகள் நடைபெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஹரியாணா மாநிலம் ரோதக் அருகேயிருக்கும் போஹர் கிராமத்தில் திருமணம் நடைபெறவிருப்பதாக உள்ளூர் செய்தியாளர் மனோஜ் டாகா கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Parveen Negi/India Today Group/Getty Images

திருமண நிகழ்ச்சிகள் களை கட்டிவிட்டது. அபய் செளதாலா, தீபேந்திரா ஹூடா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் திருமணத்தில் கலந்து கொள்கின்றனர்.

பிரபல விளையாட்டு வீர்ர்கள், அரசியல்வாதிகள் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு:

ரியோ ஒலிம்பிக்: ஒரு நுட்பமான அலசல்

ஒலிம்பிக் விளையாட்டு பற்றி தெரியாத நான்கு தகவல்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்