இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 29 மார்ச், 2012 - 10:35 ஜிஎம்டி
இலங்கிலாந்து அணி வீரர்கள்

இலங்கிலாந்து அணி வீரர்கள்

இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் ஒய்வு பெற்ற பிறகு இலங்கை அணி பெறும் முதல் வெற்றி இதுவேயாகும்.

இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில், காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோனாதன் டிராட் சதமடித்தும் அந்த வெற்றி பெற முடியாமல் போனது.


இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 318 ரன்களை அடித்தது. அணியின் தலைவர் மஹேல ஜயவர்தன அதிக பட்சமாக 180 ரன்களை எடுத்தார்.

பிறகு ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ளில் 193 ரன்களை மட்டுமே எடுத்தது.

முதல் இன்னிங்சில் 125 ரன்கள் அதிகமாகப் பெற்ற நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இலங்கை அதில் 214 ரன்களை மட்டுமே எடுத்தது.

இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் முதல் பாதி சீராக இருந்தாலும், அந்த அணியின் கடைசி 6 விக்கெட்டுகள் வெறும் 31 ரன்கள் இடைவெளில் வீழ்த்தி இலங்கை வெற்றியை தட்டிச் சென்றது.

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கண ஹேராத் இந்தப் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் தலா 6 விக்கெட்டுக்கள வீழ்த்தியதும், மஹேல ஜயவர்த்தன டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 30 ஆவது சதத்தை அடித்ததும் குறிப்பிடத்தகுந்தது.

அதேபோல இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஸ்வானும் இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி கொழும்பில் தொடங்கவுள்ளது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.