படங்களில்: ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஒலிம்பிக் தீபம் பயணிக்கின்ற இடங்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 மே, 2012 - 13:21 ஜிஎம்டி
 • சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உணர்வதற்காக அமைக்கப்பட்ட ஈடன் ப்ராஜெக்ட்
 • கோர்ன்வால் பகுதியில் முக்கிய மத ஸ்தலமாக விளங்கும் செயிண்ட் மைக்கேல் மவுண்ட்.
 • வேல்ஸின் வடக்கே அமைந்துள்ள ஸ்னோடவ்னியா தேசியப் பூங்கா.
 • உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் ரெக்ஸம் நகரத்து பாண்டிசிசில்ட் பாலம்.
 • உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கு கருவியான லோவெல் டெலெஸ்கோப் அமைந்துள்ள ஜோர்டெல் பாங்க்.
 • க்ரொஸ்பீ கடற்கரை - இங்கே சுமார் நூறு மனித உருவச் சிலைகள் மூன்று கிலோமீட்டர் தூரத்துக்கு ஆங்காங்கே என பரவி வைக்கப்பட்டுள்ளது.
 • ஐல் ஆஃப் மேன் தீவில் நடக்கும் அதிவேக கார்ப் பந்தயப் போட்டிகளின்போதும் ஒலிம்பிக் தீபம் சுமந்துசெல்லப்படும்.
 • வட அயர்லாந்தில் உள்ள உலக பாரம்பரியச் சின்னமான ஜயண்ட் காஸ்வே. இந்த இடத்தில் இயற்கையாக அமையப்பெற்ற கல்தூண் போன்ற பாறைகள் உள்ளன.
 • எடின்பர்க் நகரில் அமைந்துள்ள ஃபோர்த் ரயில் பாலம். நூறு ஆண்டுகளுக்கும் பழமையான பாலம் இது.
 • லேக் டிஸ்ட்ரிக்ட் எனப்படும் மாவட்டத்தில் பல நீர்நிலைகளுக்கு நடுவே அமைந்துள்ள விண்டர்மீயர்.
 • டட்லி நகரில் அமைந்துள்ள பிளாக் கண்ட்ரி அருங்காட்சியகம். இங்கிலாந்தில் ஆரம்பமான தொழிற் புரட்சியைக் கொண்டாடுவதற்காக அமைக்கப்பட்ட அருங்காட்சியகம் இது.
 • ஸ்டோன் ஹென்ஞ், உலகப் பாரம்பரியச் சின்னமாக விளங்கும் இந்த பாறைகள் கட்டமைப்பு, சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதனால் அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.