இந்திய ஹாக்கி அணிக்கு கடைசி இடம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 ஆகஸ்ட், 2012 - 11:56 ஜிஎம்டி

இந்திய ஹாக்கியின் எதிர்காலம் என்ன என்று கேள்விகள்

ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய ஹாக்கி அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

பங்குபற்றிய 12 அணிகளில் கடைசியாக வந்து தனது திறமையின்மையை வெளிப்படுத்தியதோடு, ரசிகர்களையும் பெருமளவில் ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.

இன்று சனிக்கிழமை (11.8.12) நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை 3-2 என்கிற கணக்கில் வென்று 11 ஆவது இடத்தை பெற்றது.

‘பி’ பிரிவில் இடம்பெற்ற இந்தியா தான் விளையாடிய ஆறு ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது.

இதற்கு முன்னர் அட்லாண்டாவில் 1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 8 ஆவது இடத்தைப் பெற்றது.

1948 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவருக்கான ஹாக்கியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.

சர்வதேச அரங்கில் சுதந்திர இந்தியா பெற்ற முதல் பெரும் வெற்றி என்று அந்த வெற்றி அப்போது பேசப்பட்டது.

இதே லண்டன் நகரில் 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளிலும் இந்தியா 12 ஆவது இடத்தையே பெற்றது.

இந்தியா கடைசியாக 1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்தான் ஹாக்கி விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றது.

அதன் பிறகு சர்வதேச அரங்கில் இந்திய ஹாக்கி தொடர்ந்து இறங்கு முகத்தையே கண்டுள்ளது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.