டி20 உலகக் கோப்பை: இறுதியாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளுடன் இலங்கை பலப்பரீட்சை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 அக்டோபர், 2012 - 10:15 ஜிஎம்டி
டி20 உலகக் கோப்பை சின்னம்

இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் (பிரிட்டிஷ் நேரப்படி மதியம் இரண்டரை மணிக்கு) கொழும்பு பிரேமதாசா விளையாட்டரங்கத்தில் ஆரம்பிக்கவுள்ளது.

இம்முறை உலகக் கோப்பையை நடத்துகின்ற இலங்கை அணியும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் இந்த ஆட்டத்தில் மோதுகின்றன.

1996ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணி 16 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்னர் மீண்டும் உலக சாம்பியன்களாக வரவேண்டும் என்ற பேராவலில் உள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பொறுத்தவரை 1979க்குப் பின்னர் அவர்கள் உலக சாம்பியன்களாக வந்ததில்லை. ஆகவே அவர்களும் இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்காக கடுமையாகப் போராடுவார்கள் என்று தெரிகிறது.

இலங்கை பாகிஸ்தானையும், மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவையும் அரையிறுதி ஆட்டங்களில் வென்றிருந்தன.

இறுதியாட்டத்தை சுமார் முப்பத்தையாயிரம் பேர் அரங்கத்தில் இருந்து நேரடியாகப் பார்த்து ரசிக்கவுள்ளனர்.

கிரிக்கெட் ஆட்டங்களின் மிகச் சிறிய வடிவம் டி20 இருபது ஓவர் போட்டிகள் ஆகும்.

2012 உலகக் கோப்பை பந்தயம் இரண்டு வார காலமாக இலங்கையில் நடந்துவருகிறது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.