சாய்னா நெஹ்வாலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் பாராட்டு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 அக்டோபர், 2012 - 15:39 ஜிஎம்டி
டென்மார்க் ஓபன் கோப்பையுடன் சாய்னா

டென்மார்க் ஓபன் கோப்பையுடன் சாய்னா

டென்மார் ஓபன் சூபர் சீரீஸ் இறகுப் பந்தாட்டப் போட்டியை இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நெஹ்வால் வென்றிருப்பதற்காக இந்திய ஒலிம்பிக் சங்கம் அவரைப் பாராட்டியுள்ளது.

சர்வதேச பந்தயங்களில் சாய்னா தொடர்ந்து நல்ல விதமாக விளையாடி வெற்றிகளைக் குவித்து வருவது இந்தியாவில் பாட்மிண்டனுக்கு மட்டுமின்றி பொதுவாக விளையாட்டுத் துறைக்கே பெரும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்காலத் தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா தில்லியில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது.

கடந்த ஒரு வருட காலத்தில் மட்டுமே சூப்பர் சீரீஸ் பந்தயங்கள் நான்கையும், லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றதன் மூலம் விளையாட்டில் இந்திய வீரர்களுக்கான சாதனை மட்டத்தை ஒரு படி மேலே கொண்டு சென்றுள்ளார் சாய்னா என்று மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

22 வயதே ஆகும் சாய்னா இந்தியாவில் விளையாட்டில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அவர் உருவெடுத்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிறன்று நடந்த டென்மார்க் ஓபன் சூப்பர் சீரீஸ் இறுதியாட்டத்தில் ஜெர்மனியின் ஜூலியன் ஷென்கை 21-17. 21-8 என்ற நேர்செட் கணக்கில் வெறும் 35 நிமிடங்களில் எளிதில் வீழ்த்தி சாய்னா பட்டம் வென்றார்.

உலகத் தரவரிசையில் தற்போது நான்காம் இடத்தில் இருக்கும் சாய்னா, தற்போது முதலிடத்தில் உள்ள வாங் யிஹானுடன் அரையிறூதியில் மோதினார்.

அடிபட்டிருந்த வலது கால் முட்டியில் வலி ஏற்பட்டதை அடுத்து வாங் யிஹான் போட்டியிலிருந்து விலக நேர்ந்திருந்தது.

லண்டன் ஒலிம்பிக் அரையிறுதியில் சாய்னா வாங் யிஹானிடம்தான் தோற்றிருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.