இந்தியா கிராண்ட் பிரீ பார்முலா ஒன் கார்ப் பந்தயத்தை வெட்டெல் வென்றார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 அக்டோபர், 2012 - 15:37 ஜிஎம்டி
வெற்றிக் கோப்பையுடன் வெட்டெல்

வெற்றிக் கோப்பையுடன் வெட்டெல்

தில்லியில் நடந்த இந்தியன் கிராண்ட் பிரீ பார்மூலா ஒன் அதிவேக கார்ப் பந்தயத்தில் ரெட் புல் அணியைச் சேர்ந்த செபாஸ்டியன் வெட்டெல் வெற்றிபெற்றுள்ளார்.

இரண்டாவதாக வந்த ஃபெராரி அணியின் ஃபெர்ணாண்டோ அலோன்ஸோவை கடுமையான போட்டிக்கிடையே ஜெர்மனியைச் சேர்ந்த 25 வயது வீரர் வெட்டெல் வீழ்த்தினார்.

டிரைவர்ஸ் சாம்பியன்ஷிப் பந்தயங்கள் வரிசையில் கடைசி நான்கு போட்டிகளை தொடர்ந்து வெட்டெல் வென்று வருகிறார்.

இந்த பந்தயத் தொடர் முடிய இன்னும் மூன்று போட்டிகள் மீதமுள்ள நிலையில் 13 புள்ளிகள் வித்தியாசத்தில் வெட்டெல் முன்னிலை வகிக்கிறார்.

தில்லியில் நடந்த போட்டியில் மூன்றாவது இடத்தில் வந்திருப்பவர் ரெட் புல் அணியின் மார்க் வெப்பர் ஆவார்.

மெக்லாரன் அணியின் லூவிஸ் ஹாமில்டண் நான்காவது இடத்தில் வந்துள்ளார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.