சர்வதேச ஒரு-நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 டிசம்பர், 2012 - 16:48 ஜிஎம்டி
இந்தியாவின் மிகப் பிரபலமான கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார்

எண்ணிலடங்கா ரசிகர்களுடன் இந்தியாவின் மிகப் பிரபலமான கிரிக்கெட் வீரர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர்தான்.

சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் சரி, டெஸ்ட் போட்டிகளிலும் மிக அதிக ரன்களைக் குவித்த சாதனைக்கு சொந்தக்காரரான இந்தியாவின் நட்சத்திர ஆட்க்காரர் சச்சின் டெண்டுல்கர் ஒரு-நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உலகக் கோப்பையை வெல்லும் இந்திய அணியின் அங்கமாக இருக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியது, தனக்கு கிடைத்த பெரிய பாக்கியம் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தனது நெடிய கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தனக்கு ஆதவும் ஊக்கமும் தந்தவர்களுக்கு நன்றிக் கடன் பட்டிருப்பதாக சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

1989 முதல் சர்வதேச ஒரு-நாள் போட்டிகளில் விளையாடிவரும் டெண்டுல்கர் இதுவரை இந்தியாவுக்காக 463 ஒரு-நாள் ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

ஐம்பது ஓவர்கள் கொண்ட ஒரு-நாள் ஆட்ட வடிவில், உலகிலேயே மிக அதிகமாக 18,426 ரன்களைக் குவித்தவர் டெண்டுல்கர்.

44.83 என்ற சராரசியுடன் இவர் குவித்த ரன்களில், 49 சதங்களையும் இவர் அடித்தது மேலும் ஓர் உலக சாதனை ஆகும்.

இவர் கடைசியாக விளையாடிய சர்வதேச ஒரு-நாள் ஆட்டம் என்பது கடந்த மார்ச் 18ஆம் தேதி ஆசியா கோப்பை பந்தயத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றியீட்டிய ஆட்டம்தான்.

இதில் 52 ரன்களை சச்சின் எடுத்திருந்தார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.