ஐந்து வருட இடைவெளிக்குப் பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையில் கிரிக்கெட் தொடர்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 டிசம்பர், 2012 - 16:02 ஜிஎம்டி
இந்தியா பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் ஆட்டங்கள் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை உருவாக்குபவை

இந்தியா பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் ஆட்டங்கள் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை உருவாக்குபவை

இந்தியாவுக்கும் பாகிஸ்தானும் ஐந்து வருட இடைவெளிக்குப் பின்னர் முதல் தடவையாக கிரிக்கெட் தொடர் ஒன்றில் விளையாடுகின்றனர்.

மும்பை நகரில் 2008ஆம் ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இவ்விரு நாடுகள் இடையிலான கிரிக்கெட் சுற்றுப்பயணங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

நூற்றியெழுபதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானிகளே காரணம் என்று இந்தியா பழிசுமத்தியதை அடுத்து இவ்விரு நாட்டின் கிரிக்கெட் நிர்வாகம் இடையில் உறவு முறிந்திருந்தது.

இந்தியா பாகிஸ்தானிடையிலான உறவு சுமூகமடைந்துவரும் ஒரு சூழ்நிலையில் தற்போது பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு பயணம் சென்று இந்த தொடரில் விளையாடுகிறது.

பெங்களூரில் செவ்வாயன்று இவ்விரு அணிகளும் இருபது ஓவர் ஆட்டம் ஒன்றில் மோதுகின்றன.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.