டோணியின் அபார இரட்டைச் சதம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 பிப்ரவரி, 2013 - 12:09 ஜிஎம்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.

அணித் தலைவர் மகேந்திர சிங் டோணியின் இரட்டை சதம் காரணமாக, இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிறக்கு 515 ரன்களைக் குவித்துள்ளது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 380 ரன்களை எடுத்து, அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது.

சதம் அடிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட சச்சின் டெண்டூல்கர் 81 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். வீராட் கோலி 107 ரன்களை எடுத்தார்.

ஆனால் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் இப் போட்டியின் ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் டோணியின் அபார இரட்டை சதத்தை கொண்டே நினைவு கூரப்படும். வெறும் 243 பந்துகளை எதிர் கொண்டு 206 ரன்களை டோணி எடுத்துள்ளார். இதில் 22 பவுண்ட்ரிகளும், 5 சிக்சர்களும் அடக்கம். டோணியுடன் பி குமார் ஆட்டமிழக்காமல், 16 ரன்களுடன் ஆடிக் கொண்டிருக்கிறார்.

டோணி தனது கிரிக்கட் ஆடங்களில் இதுவரை அடுத்த மிகக்கூடுதலான ஓட்டங்கள் இதுவேயாகும்.

அத்துடன், இந்திய அணியின் விக்கட் காப்பாளர் எடுத்த அதிக கூடிய ஓட்டங்களுக்கான சாதனையையும் டோணி இதன் மூலம் தகர்த்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இந்திய அணி 135 ரன்களை கூடுதலாகப் பெற்றுள்ளது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.