101 வயது மராத்தன் சூறாவளி ஓய்வு பெறுகிறது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 பிப்ரவரி, 2013 - 12:47 ஜிஎம்டி

உலகின் மிகவும் வயதான மராத்தான் ஒட்டப் பந்தய வீரரான ஃபவுஜா சிங் தான் ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவருக்கு தற்போது 101 வயதாகிறது. சீக்கியரான இவருக்கு, ''தலைப்பாகை கட்டிய சூறாவளி'' என்ற புனைப்பெயர் உண்டு. கடைசியாக அவர் பங்கு பெற்ற ஹாங்காங் மராத்தான் போட்டியில் அவர் 10 கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரம் 32 நிமிடங்களில் ஒடிக் கடந்தார்.

பிரிட்டனில் வாழும் இவர் தனது 89 ஆவது வயதில்தான் நீண்ட தூர ஒட்டப் பந்தயத்தில் பங்கேற்க ஆரம்பித்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு கனடாவின் டோரன்டோவில் நடைபெற்ற முழு நீள மரத்தான் பந்தயத்தை ஒடிக் கடந்த மிகவும் வயதான நபர் என்ற இவர் பெருமையைப் பெற்றார்.

ஆனால் இவரிடம் முறையான பிறப்பு சான்றிதழ் இல்லாததால் அவரின் இந்த சாதனை அங்கீகரிக்கப்படவில்லை.

தொழில் ரீதியான போட்டிகளில் இருந்து விலகினாலும் உடல் ஆரோக்கியத்திற்காக தான் தொடர்ந்து ஒடுவேன் என்று ஃபவுஜா சிங் கூறியுள்ளார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.