ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஊக்க மருந்து பயன்பாடு: அதிகரிக்கும் கவலைகள்

  • 13 ஆகஸ்ட் 2013
Image caption ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய இந்திய தொடரோட்ட வீரர்கள்.

விளையாட்டுத்துறையில் ஊக்க மருந்துப் பரிசோதனையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட இந்திய விளையட்டு வீரர்கள் தோல்வியடைந்துள்ளனர் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தின் தெரிவித்துள்ளார்.

இது பல மட்டங்களில் கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக பளுதூக்கும் வீரர்களே கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளனர் என்று அமைச்சர் கூறினாலும், 2009 ஆம் ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று, இந்திய பளுதூக்கும் சம்மேளனம் கூறுகிறது.

Image caption சிறிய அளவில் பயன்படுத்தினாலும், கண்டுபிடிக்க வழிமுறைகள் உள்ளன.

பளுதூக்கும் வீரர்கள் பெருபாலும் ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வியடைவது, அவர்களது அறியாமை காரணமாகத்தான் என்கிறார் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவரும் பயிற்சியாளருமான எம் தமிழ்ச்செல்வன்.

தமிழ்ச்செல்வன் கூறும் கருத்துக்களை இந்திய ஒலிம்பிக் சம்மேளனமும் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்கிறது என்று அதன் இணை துணைத் தலைவர் ரகுநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் இப்படியான சமாதானங்களை கூறினாலும், சர்வதேச மட்டத்தில் இவையெல்லாம் எடுபடாது என்பதே யதார்த்தமான உண்மை என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

எனினும் இந்திய ஒல்ம்பிக் சம்மேளனமோ, வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அந்தந்த விளையாட்டு சம்மேளனங்களின் பொறுப்பு என்று கூறுகிறது.