சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் புதிய தலைவர் தாமஸ் பாக்ஹ்

  • 10 செப்டம்பர் 2013
Image caption ஐ ஓ சியின் புதிய தலைவர் தாமஸ் பாக்ஹ்

சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவராக ஜெர்மனியின் தாமஸ் பாக்ஹ் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

அர்ஜெண்டினா நாட்டின் தலைநகர் புவனஸ் எய்ரிஸின் இடம்பெற்ற தேர்தலில் அவர் தேர்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவிக்கு ஆறு பேர் போட்டியிட்டனர்.

கடந்த 12 வருடங்களாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவராக இருந்த ழாக் ரோக் அவர்களை அடுத்து தாமஸ் பாக்ஹ் அந்தப் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

வழக்கறிஞரான தாமஸ் பாக்ஹ் இதுவரை ஐ ஓ சி யின் துணைத் தலவராக இருந்தார்.

1976 ஆம் ஆண்டு கனடாவின் மொண்ட்ரியோல் நகரில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், வாள்வீச்சுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் தாமஸ் பாக்ஹ் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற ஒருவர் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறை.

ஐ ஓ சியின் ஒன்பதாவது தலைவராக தாமஸ் பாக்ஹ் பொறுப்பேற்கிறார்.