ஐபிஎல் சூதாட்டம்: 'குருநாத் மெய்யப்பன் குற்றவாளி'

படத்தின் காப்புரிமை csk
Image caption குருநாத் மெய்யப்பன்

இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டி பற்றிய போட்டி நிர்ணய சூதாட்ட (மேட்ச் ஃபிக்ஷிங்) விசாரணையில் நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத் தலைவர் என். ஸ்ரீநிவாசனின் மருமகன் குற்றவாளி என்று விசாரணைக் குழு உறுதிசெய்துள்ளது.

சட்டவிரோத சூதாட்ட தரகர்களுக்கு தகவல்களை வழங்கியிருந்தமை தொடர்பிலேயே குருநாத் மெய்யப்பன் குற்றவாளி என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்திய உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணைக் குழுவினர், குருநாத் மெய்யப்பன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

குருநாத் மெய்யப்பன் தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பற்றி பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்த சூதாட்ட மோசடி விவகாரத்தை அடுத்து

கடந்த ஆண்டு அக்டோபரில் நீதிமன்றம் இந்த விசாரணை மன்றத்தை அமைத்தது.

குருநாத் மெய்யப்பன், ஐபிஎல்-இன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத் தலைவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.