கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வென்று இறுதியாட்டத்தில் நுழைந்தது இந்தியா

விராத் கோலி படத்தின் காப்புரிமை Getty
Image caption விராத் கோலி

வங்கதேசத்தில் நடந்துவரும் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்று இறுதியாட்டத்துக்குள் நுழைந்துள்ளது.

சற்று முன்னர் நிறைவுற்ற இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா வீழ்த்தியது.

இந்திய அணியினர் 4 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 173 என்ற இலக்கை எட்டியிருந்தனர்.

இந்திய அணியின் விராத் கோலி அற்புதமாக விளையாடி அரை சதம் அடித்திருந்தார்.

6ஆம் தேதி நடக்கவுள்ள இறுதியாட்டத்தில் இந்திய அணி இலங்கையை எதிர்த்து மோதவுள்ளது.