கிளிநொச்சியில் தீ விபத்து, மூன்று கடைத் தொகுதிகள் தீயில் எரிந்து நாசம்

Image caption தீயை கட்டுப்படுத்த காவல்துறையினரும் இராணுவத்தினரும் போராடிய போதும், தீயணைக்கும் வாகன வசதிகள் இல்லாத காரணத்தால் சிரமங்களை சந்தித்து இருக்கின்றனர்.

கிளிநொச்சியின் சந்தைப் பகுதியில் வெள்ளிக்கிழமை முன்னிரவு ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் புடவை கடைத் தொகுதி ஒன்று, பலவிதப் பொருட்களை விற்கும் கடைத் தொகுதி ஒன்று உட்பட மூன்று கடைத் தொகுதிகள் தீயினால் எரிந்து நாசமடைந்துள்ளன.

Image caption கிளிநொச்சியில் தீ விபத்து, மூன்று கடைத் தொகுதிகள் எரிந்து நாசம்

தீயை கட்டுப்படுத்த காவல்துறையினரும் இராணுவத்தினரும் போராடிய போதிலும், தீயணைக்கும் வாகன வசதிகள் இல்லாத காரணத்தால் அவர்கள் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Image caption புடவை கடைத் தொகுதி, பலவிதப் பொருட்களை விற்கும் கடைகளின் தொகுதி உட்பட மூன்று கடைத் தொகுதிகள் தீயினால் எரிந்து நாசமடைந்துள்ளன.

தீ மேலும் ஏனைய கடைத் தொகுதிகளுக்குப் பரவாமல் தடுப்பதற்காக, கனரக இயந்திரங்களின் உதவியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இந்தத் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்