இலங்கை கிளிநொச்சி சந்தை தீ விபத்தில் பல கோடி ரூபாய் பொருள் எரிந்து நாசம்

இலங்கை கிளிநொச்சியின் சந்தைப் பகுதியில் வெள்ளிக்கிழமை முன்னிரவு எட்டு மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 75 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

Image caption பல மணி நேரம் தொடர்ந்து எரிந்த கட்டுக்கடங்காத தீ

நூறு கடைகளுக்கு மேலாக தீயால் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்றிரவு ஏற்பட்ட இந்தத் தீயை இன்று அதிகாலை 5 மணியளவில்தான் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீயணைக்கும் வாகன வசதிகள் இல்லாத காரணத்தால் பல சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயை அணைப்பதில் ஈடுபட்ட 5 படையினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிர் சேதங்கள் எதுவுமில்லை.

பொருட்சேதங்கள் கோடிக்கணக்கான ரூபாய் அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனை மதிப்பிடும் பணி தொடங்கியுள்ளது.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி போலிஸார் புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்