இலங்கை: கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்ல கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

Image caption ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ

அவன்கார்ட் எனும் தனியார் நிறுவனமொன்றுக்கு ஆயுதக் களஞ்சியமொன்றை நடத்திட அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்துக்கு, சுமார் 11.4 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக பிணை வழங்கிய போது முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் வெளிநாட்டு பயணங்களை முடக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இன்று நீதிமன்றம் முன் ஆஜரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு தொடர்பாக சீனா செல்ல அனுமதி தருமாறு நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இதன்படி ஐம்பது லட்சம் ரூபாய் சரீர பிணையின் கீழ் இம்மாதம் 5-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையிலான காலப் பகுதிக்குள் வெளிநாடு செல்ல கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.

தொடர்புடைய தலைப்புகள்