மோசமாக மாசடையும் மகாவலி ஆறு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மோசமாக மாசடையும் மகாவலி ஆறு

இலங்கையின் மிகப்பெரிய ஆறு மகாவலி. நாட்டின் மத்திய மலைகளில் உற்பத்தியாகும் இந்த ஆற்று நீரைக்கொண்டு விவசாயம், நீர்மின் உற்பத்தி உட்பட பல முக்கிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்தோடு, உலகில் அழிவின் விளிம்பில் இருக்கும் மீன் மற்றும் மூலிகை வகைகள் இந்த ஆற்றிலும் அதனைச் சூழவுள்ள நீர்ப்பாசனப் பகுதிகளிலும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால் மனித செயற்பாடுகளால், இந்த மகாவலி ஆற்றின் நீர்ப்பாசனப்பகுதிகளும், அதன் பொக்கிஷமாக கருதப்படும் அரிய மீன் மற்றும் மூலிகை இனங்களும் அழியும் அபாயத்தை எட்டியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளார்கள்.

கண்மூடித்தனமான மண் அகழ்வு, ஆற்றில் குப்பைகளை கொட்டுவது மற்றும் சிறு தனியார் நீர்மின் உற்பத்திக்காக ஆற்றை முறைகேடாக பயன்படுத்துவது போன்றவை இதற்கான காரணங்கள் என்று மத்திய மாகாண சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒன்றியம் கூறுகிறது.

இலங்கையின் மிகப்பெரிய இயற்கை செல்வமாகவும் முக்கிய நீராதாரமாகவும் வர்ணிக்கப்படும் மகாவலி ஆறு சந்திக்கும் சுற்றுச்சூழல் ஆபத்துகள் குறித்து பிபிசியின் பிரத்யேக செய்தித்தொகுப்பு.