இலங்கை: யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்

இலங்கையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணத்திற்கு நீதி கோரி கிழக்கு மற்றும் தென் பல்கலைக்கழக மாணவர்களும் இன்று (திங்கள் கிழமை) ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

Image caption ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமுலை வளாகத்திற்கு முன்பாகவும், சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவனங்களுக்கு முன்பாக மாணவர்கள் ஓன்றுகூடி இந்த ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்பாட்டம் ஓலுவில் வளாகத்திற்கு முன்பாக நடைபெற்றது.

ஆர்பாட்டங்களில் கலந்து கொண்ட மாணவர்கள், போலீஸார் மாணவர்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து அதற்கு நீதி கோரும் வகையில் வாசக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களையும் எழுப்பினார்கள்.

Image caption வாசக அட்டைகளை ஏந்தி போராடிய மாணவர்கள்

இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், 10 வருடங்களுக்கு முன்னர் சிறப்பு அதிரடிப்படையினரால் திருகோணமலையில் 5 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையும் நினைவுகூர்ந்தனர்.

இப்படுகொலை நடைபெற்று 10 வருடங்கள் கடந்து விட்ட நிலையில், இதுவரை நீதி கிடைக்கவில்லை என்று மாணவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.

தொடர்புடைய தலைப்புகள்