இலங்கை: போரில் இறந்தோரை நினைவு கூரும் மாவீரர் தினம் அனுசரிப்பு

இலங்கையில், கிழக்கு மாகாணத்திலும் போர்க்காலத்தில் மரணித்த விடுதலைப்புலிகளை நினைவு கூரும் மாவீரர் தினம் தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றன.

Image caption கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள்

கிழக்கு பல்கலைக்கழகம் வந்தாறுமுலை வளாகத்திலுள்ள பிள்ளையார் ஆலயத்தில், விடுதலைப்புலிகளின் மாவீரர்கள் நினைவாக சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து நினைவு சுடரேந்தல் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வில் குறிப்பாக ஏற்பாட்டாளர்களான தமிழ் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Image caption கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள்

மட்டக்களப்பு நகரில் இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நினைவு சுடரேற்றல் நிகழ்வில், அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மாகாண சபை உறுப்பினர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் மாவீரர்கள் கல்லறை ஏற்கனவே அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லம் என கூறப்படும் இடத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் நினைவு தீபம் ஏற்றினார்.

மட்டக்களப்பு மாவட்;டத்தில் சில பிரதேசங்களில் விடுதலைப்புலிகளின் மாவீரர்களை நினைவு கூறும் வகையிலான பிரசுரங்களும் வெளியாகியிருந்தன.

செங்கலடி பிரதேசத்தில் வெளியிடப்பட்ட பிரசுரமொன்றில் விடுதலைப்புலிகளின் இலச்சினை காணப்பட்ட போதிலும், எந்தவொரு அமைப்பின் பெயர்களும் அதில் குறிப்பிடப்படவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்