இலங்கை கடல் பகுதியில் உடைந்த விமான பாகம்? போலீசார் தீவிர விசாரணை

படத்தின் காப்புரிமை Huw Evans picture agency
Image caption விமான பாகம் என சந்தேகிக்கப்படும் பகுதி

இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் விமானத்தின் பாகம் என சந்தேகிக்கப்படும் 15 அடி நீளமான உலோக பொருளொன்று கரையொதுங்கியுள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர்.

Image caption போலீஸ் விசாரணையில்

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை கடல் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த பொருள் கரையொதுங்கியுள்ளது.

கடற்கரையை அண்மித்ததாக விமானத்தின் பாகம் என சந்தேகிக்கப்படும் பொருளொன்று காணப்படுவதாக மீனவர்களினால் போலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

Image caption மீட்கும் பணியில் காவல்துறை

இதனையடுத்து அங்கு விரைந்த போலிஸாரால் கடற்படை உதவி நாடப்பட்டு குறித்த பாகம் கரைக்கு கொண்டு வரப்பட்டதாக போலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தின் பாகம் என கருதப்படும் குறித்த உலோகப் பொருளில் எழுத்துக்கள் காணப்படுகின்ற போதிலும் எந்த மொழி என இதுவரை கண்டறிப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் கிழக்கு பகுதியில் விமானமொன்றின் பாகங்கள் காணப்படுவதாக உள்ளுர் மீனவர்களை மேற்கோள் காட்டி சமூக வலைத் தளங்களில் கடந்த ஓரிரு நாட்களாக செய்திகள் வெளியாகிவந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய தலைப்புகள்