இலங்கையின் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க காலமானார்

இலங்கையின் முன்னாள் பிரதம மந்திரியான ரத்னசிறி விக்கிரமநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை தனது 83 வது வயதில் காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த சில நாட்களாக அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இலங்கையின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராக விளங்கிய இவர், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் துணைத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார்.

35 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்து வந்த இவர் துணை அமைச்சர் மற்றும் அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார்.

2005 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக தெரிவானதையடுத்து பிரதமராக பதவியேற்றுக் கொண்ட ரத்னசிறி விக்கிரமநாயக்கா 2010 ம் ஆண்டு வரை அந்தப் பதவியை வகித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்