பிரதமர் ரணில் நாட்டில் இருக்கும் போதுதான் அரசைக் கவிழ்பேன் : மகிந்த ராஜபக்ஷ

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டில் இருக்கும் போதே, தான் அரசாங்கத்தை கவிழ்க்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இன்று கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துக்களை தெரிவித்த போதே அவர் இதனை அறிவித்தார்.

அண்மையில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2017 ம் ஆண்டு தான் அரசாங்கத்தை கவிழ்க்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதில் வழங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நல்லாட்சி அரசாங்கத்தை எவரும் கவிழ்க்க முடியாதென்று கூறியிருந்தார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption மஹிந்த ராஜபக்ஷ

தான் ஒருவார காலத்திற்கு சுவிஸ் நாட்டில் விஜயமொன்றை மேற் கொள்ளவுள்ளதாக கூறிய பிரதமர் விக்ரமசிங்க முடிந்தால் அந்த காலப்பகுதிக்குள் அரசாங்கத்தை கவிழ்க்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு சவாலொன்றை விடுத்தார்.

அதற்கு இன்று பதில் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதமர் நாட்டில் இருக்கும் போதே தான் அரசாங்கத்தை கவிழ்க்கவுள்ளதாக அறிவித்தார்.

எனவே பயமின்றி வெளிநாடு செல்லுமாறு அவர் பிரதமரிடம் வேண்டுகோளொன்றை விடுத்தார்.

ஜனநாயக ரீதியாகவே அரசாங்கம் கவிழ்க்கப்படுமென்று கூறிய முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ அதனை மேற் கொள்ளவுள்ள தினங்களை கூ ற முடியாதென்று அறிவித்தார்.