இலங்கை: மலையகத்தில் தொடரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்

தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கையில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Image caption மலையகத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்

இலங்கையில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட 5-ஆவது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மலையகத்தில் நாவலப்பிட்டி மற்றும் ஹட்டன் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பெண்கள் உட்பட பலரும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பீட்டாவிற்கு எதிராகவும் வாசக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களையும் எழுப்பினர்.

Image caption மலையகத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்

தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இலங்கையில் நடைபெற்று வரும் இந்த போராட்டங்கள் வடக்கு , கிழக்கு மாகாணங்களிலும் தலைநகர் கொழும்பிலும் இதுவரையில் நடைபெற்ற போராட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் கலந்து கொண்டு ஆதரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்