தேச துரோகிகளாக அடையாளம் காணப்பட்டவர்களை தேசப்பற்றுள்ளவர்களாக பிரகடனம் செய்தார் சிறிசேன

1818 ஆம்-ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டதன் காரணமாக தேசத்துரோகிகள் என்று பகிரங்கப்படுத்தப்பட்ட 82 இலங்கை போராளிகள் இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் தேசப்பற்றுள்ளவர்கள் என்று அறிவிக்கப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை PMO
Image caption தேச துரோகிகளாக அடையாளம் காணப்பட்டவர்களை தேசப்பற்றுள்ளவர்களாக பிரகடனம் செய்தார் சிறிசேன

இன்று மாலை கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றின் போது ஜனாதிபதியினால் சம்பந்தப்பட்ட வர்த்த்தமானி அறிவித்தலில் கையொப்பம் இடப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தாய் நாட்டின் சுதந்திரத்துக்காக 1818 -ஆம் ஆண்டு போராடிய போர் தலைவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் தேசத்துரோகிகள் என்று சட்ட ரீதியாக பகிரங்கப்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

பிரிட்டிஷ் ஆட்சியாரகளின் அந்த அறிவித்தல் இன்று சட்ட ரீதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி சிறிசேன அவர்கள் இன்று தேசப்பற்றுள்ளவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Image caption கேப்பெட்டிபோல எனும் போர் வீரரின் படம்

தாய் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய இந்த வீரர்களுக்கு அன்று மரண தண்டனை வழங்கப்பட்டதாக கூறிய ஜனாதிபதி சிறிசேன சிலர் நாடு கடத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

அவர்களின் சொத்துக்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் பறிமுதல் செய்யப்பட்டது.

1948-ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட இந்த போர் வீரர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லையென தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, வரலாற்றில் இடம்பெற்ற பாரிய தவறொன்றை திருத்துவதற்காகவே அரசாங்கம் இந்த நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண :பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்