மீனவர்களை சுட்டுக் கொல்வது பரிகாரம் அல்ல : நாடாளுமன்ற உறுப்பினர் சா. வியாழேந்திரன் கருத்து

சர்வதேச கடல் எல்லையை தாண்டும் மீனவர்களை சுட்டுக் கொல்வது அதற்கு பரிகாரம் அல்ல என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சா.வியாழேந்திரன் கூறுகின்றார்.

Image caption மீனவர்களை சுட்டுக் கொல்வது பரிகாரம் அல்ல : சா. வியாழேந்திரன்

இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மீனவர் மீது இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு இராமேஸ்வரம் மீனவரொருவர் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி வந்தபோது கடற்படையால் சுடப்பட்டுள்ளார் என்றும், சர்வதேச கடல் எல்லையை யார் தாண்டி வந்தாலும் அவர்களை கைது செய்ய வேண்டுமே தவிர சுட்டுத் தான் கொல்ல வேண்டும் என்பது பரிகாரம் அல்ல என்றும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சா. வியாழேந்திரன் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்