இலங்கை : பிள்ளையான் உள்பட 7 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 7 பேருக்கு எதிராக சட்ட மா அதிபதியினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்டுள்ள 7 பேரில் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா , கஜன் மாமா என அழைக்கப்படும் ரெங்கசாமி கனகநாயகம் இராணுவ புலனாய்வில் பணியாற்றிய மீராலெப்பை கலீல் ஆகியோர் கைதாகி ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரனைக்கு வந்த போது குறித்த 4 எதிரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

சட்ட மா அதிபதியினால் முன் வைக்கப்பட்டுள்ள 11 குற்றச்சாட்டுக்களும் தனித்தனியாக நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட வேளை அதனை நிராகரித்த எதிரிகள் தாங்கள் நிரபராதி என தெரிவித்தனர்.

எதிர்வரும் மே மாதம் 4ஆம் தேதி வரை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிரிகள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

2005-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதிமட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திற்குள் வைத்து நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மனைவி உட்பட சிலர் காயமடைந்தனர்.

இந்த படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் குறித்த நான்கு பேரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குற்றப்புலனாய்வு துறையினரால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அன்றிலிருந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிவநேசதுரை சந்திகாந்தன் தன்னை பிணையில் செல்ல அனுமதி கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளது. அவரால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு எதிர்வரும் மே மாதம் 30ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்