டெங்கு என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

படத்தின் காப்புரிமை SPL

டெங்கு என்றால் என்ன?

  • ஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.
  • இந்த வகைக் கொசு, மற்ற கொசுக்களைப் போலல்லாமல், பகல் வேளைகளில்தான் கடிக்கின்றது.
  • உலகெங்கிலும் ஆண்டுக்கு 6 கோடி பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
  • ஆண்டுதோறும் 24,000 பேர் இதனால் இறக்கின்றனர்
  • ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் இது காணப்படுகிறது.

அறிகுறிகள்

  • தலைவலி
  • காய்ச்சல்
  • தோலில் தடிப்புகள்
  • உடம்பு வலிகள்
  • இந்த அறிகுறிகள் 2-3 நாட்களுக்கு நீடிக்கலாம்
  • இந்த நோய் தாக்கிய ஒருவருக்கு சுமார் மூன்று மாதங்கள் களைப்பாக உணர்வர். ஆனால் பொதுவாக இதற்கு சிகிச்சை தேவைப்படாது.

பிபிசியின் பிற செய்திகள்

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா நீங்கள்? சிக்கல்களை வெளிப்படுத்துகிறது ஆய்வு

புற்றுநோய், மாரடைப்பைத் தடுத்து நிறுத்தும் பழம், காய்கறிகள் பட்டியல்

டெங்கு நோய் பீடித்தால் மரணம் உறுதியா?

  • குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் வயது வந்தவர்களையும் பாதிக்கும் இந்நோய், பொதுவாக மரணத்தை ஏற்படுத்துவதில்லை.
  • ஆனால் டி.எச்.எஃப் என்ற ஒரு வகை ஜுரம் உயிராபத்தை தோற்றுவிப்பதாக இருக்கலாம்.

பிபிசியின் பிற செய்திகள்

இலங்கையில் டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதார அமைச்சின் சிறப்பு திட்டம்

இலங்கையில் டெங்கு காய்ச்சல் பரவல் - மக்கள் அச்சம்

தீவிரமடையும் டெங்கு: கிண்ணியாவில் 3 நாட்களுக்கு பள்ளிகள் மூடல்

இலங்கை : டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

செய்ய வேண்டியவை

  • கொசுக்கடியிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்
  • பாதிக்கப்பட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டும்
  • அதிகப்படியான ஓய்வு எடுக்க வேண்டும்
  • இதற்கு தடுப்பு மருந்து கிடையாது
  • ஆனால் ஒரு முறை டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு பொதுவாக அதே ஆண்டு மீண்டும் அந்நோய் வராது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்