வைரஸ் அச்சுறுத்தல்: இலங்கை பேராதனை பல்கலைக்கழகம் மூடல்

இலங்கையில் மத்திய மாகாணத்தில் பரவி வரும் ஒருவித வைரஸ் காய்ச்சல் காரணமாக பேராதனை பல்கலைக்கழகம் இன்று செவ்வாய்கிழமை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் இது தொடர்பான முடிவையடுத்து விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை நண்பகலுடன் விடுதிகளிலிருந்தும் வெளியேறிவிட்டனர்.

இலங்கையில் மீண்டும் எச்1 என்1 தொற்று பரவம் ஆபத்து

கிண்ணியாவில் இலங்கை ஜனாதிபதி திடீர் ஆய்வு

மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம் மற்றும் சட்டம் உட்பட பல்வேறு துறைகளில் சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்கின்றனர்

சளி, இருமல், காய்ச்சல் போன்ற சில அறிகுறிகளுடன் 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒருவித வைரஸ் தொற்றுக்குள்ளாகி அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

டெங்கு என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

இலங்கையில் டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதார அமைச்சின் சிறப்பு திட்டம்

இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியாத நிலையில் சகல கல்வி நடவடிக்கைகளையும் இடை நிறுத்த முடிவு செய்யப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்கின்றது.

வைரஸ் தொற்றுக்குள்ளான மாணவர்களில் சிலர் பேராதனை மற்றும் கண்டி அரச மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிண்ணியாவில் இலங்கை ஜனாதிபதி திடீர் ஆய்வு

இலங்கை : டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

மத்திய மாகாணத்தில் எச்1 என் 1 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தற்போது தீவிரமடைந்து வருகிறது. இந்த மாணவர்களில் 30 சதவீதமானோர் எச்1 என்1 வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

ஆய்வுகளின் பின்னரே அதனை உறுதி செய்ய முடியும் என சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இந்த மாகாணத்தில் எச்1 என் 1 வைரஸ் தொற்றுக்குள்ளான 115 பேர் இனம் காணப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். 17 மரணங்களும் பதிவாகியுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்