நீல நிறமாக மாறுகிறது இலங்கை போலீசாரின் சீருடை

இலங்கையில்போலீசாரின் சீருடையில் மாற்றங்களை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போலிஸ் மா அதிபர் புஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption நீல நிறமாக மாறுகிறது இலங்கை போலீசாரின் சீருடை

பண்டாரவளை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இதனை அறிவித்தார்.

நீண்ட காலமாக ஒரே நிற போலீஸ் சீருடை பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த போலிஸ் மா அதிபர், தற்போது அது மாற்றப்பட வேண்டிய காலம் எழுந்துள்ளதாக தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் போலீசாரின் சீருடைகளுக்காக நீல நிறம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எனவே, எமது போலீசாரின் சீருடைகளுக்காக கடும் நீல நிறத்தை அறிமுகப்படுத்த தீர்மானமொன்று இருப்பதாக கூறிய போலிஸ் மா அதிபர் ஜெயசுந்தர அதனை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்தார்.

Image caption நீல நிற சீருடை கொண்ட ஃபிரெஞ்ச் போலீசார்

மேலும் கருத்து தெரிவித்த போலிஸ் மா அதிபர் புஜித் ஜெயசுந்தர கடந்த ஆட்சிக் காலத்தின் போது தான் பாரிய பழிவாங்கல்களுக்கு முகம் கொடுத்தாக தெரிவித்தார்.

ஆனால், தற்போது போலிஸ் சேவை மீது மேற்கொள்ளப்படும் அரசியல் தலையீடுகள் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், போலிஸ் அதிகாரிகளுக்கு சுதந்திரமாக தனது பணிகளை மேற் கொள்ளக்கூடிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

சட்டீஸ்கர்: மாவோயிஸ்ட் தாக்குதலில் 26 சி.ஆர்.பி..ஃஎப். போலீசார் பலி

இலங்கை பெட்ரோலியத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் : எரிபொருள் விநியோகம் பாதிப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்