இலங்கை வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 100 பேர் பலி

இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 99 ஆக குறைந்துள்ளது.

இந்த தகவலை அரசு பேரிடர் முகாமைத்துவ மையத்தின் உதவி இயக்குநரான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்

களுத்துறை , இரத்தினபுரி , மாத்தறை மற்றும் கேகாலை மற்றும் கம்பகா ஆகிய மாவட்டங்களிலே மரணங்களும் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களும் பதிவாகியிருப்பதாக அவர் தெரிவிக்கின்றார்.

குறிப்பாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற அனர்த்தங்களினால் சுமார் 52 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 2 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையத்தின் உதவி இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிடுகின்றார்

அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டம் -38 பேர் கம்பகா மாவட்டம் - 02 பேர் என 40 மரணங்களும் பதிவாகியுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் 80 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டம் - 49 பேர் கேகாலை மாவட்டம் - 02 பேர் என்ற எண்ணிக்கையில் உயிரிழப்புகள் இடம் பெற்றுள்ளன. கேகாலை மாவட்டத்தில் 2 பேர் காணாமல் போயுள்ளனர்.

தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் ஏற்கனவே காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்த சிலர் சடலங்களாக மீட்கப்பட்டதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 17 என அறிவிக்கப்பட்டுள்ளது. இம் மாகாணத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது

மழையுடன் கூடிய கால நிலை நீடிக்குமானால் கம்பகா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலுள்ள சில பிரதேசங்களில் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Image caption இந்தியாவில் அனுப்பட்ட உதவிப்பொருட்கள் இலங்கையை சென்றைடைந்துள்ளன

அந்த பகுதிகளிலுள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் அவ் வழியாக போக்குவரத்து செய்வோர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய நிவாராண பொருட்களுடன் அந் நாட்டிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை புறப்பட்ட கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றுமோர் நிவாரண கப்பல் வந்தடையவிருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்:

இலங்கை மலையக பள்ளிகளுக்கு இந்திய ஆசிரியர்களை அழைக்க எதிர்ப்பு

நிவாரணப் பொருட்களுடன் இலங்கை விரையும் இந்திய கப்பல்

இலங்கையில் இயற்கையின் தாண்டவம்: 91 பேர் பலி (புகைப்படத் தொகுப்பு)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்