கருக்கலைப்புச் சட்டத்துக்கு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு எதிர்ப்பு

இலங்கையில் இரு காரணங்களுக்காக கருக்கலைப்புக்கு அனுமதியளிக்கும் வகையிலான சட்டத்திற்கு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

பாலியல் வன்முறையால் உருவான மற்றும் மரபணு பிறழ்வுக்குள்ளான கருக்களை கலைப்பதற்கு சட்ட ரீதியாக அனுமதியளிக்கும் வகையில் கொண்டு வரப்படவுள்ள இந்த சட்டத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெற வேண்டியுள்ளது. இந்த காரணங்களுக்காக அனுமதியளிப்பதை உரிய துறைசார் மருத்துவ நிபுணர்களும் ஆதரிக்கின்றனர்.

"குறித்த சட்டம் நடைமுறைக்கு வந்தாலும் கருவை கலைப்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கும் உரிமை தாய்க்குரியது,'' என சமூக வைத்திய நிபுணரான டாக்டர் கபில ஜயரட்ன தெரிவித்திருந்தார்.

காரணங்கள் என்னவாக இருந்தாலும் எப்படி இருந்தாலும் கருக்கலைப்புக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்குவதை எதிர்ப்பதாக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு கூறுகின்றது.

'' கருவொன்று உருவாகினால் அந்தக் கனத்திலே மனித உயிர் உருவாகின்றது. அது பரிசுத்தமானது. அதனை கலைக்கும் உரிமை யாருக்கும் இல்லை " என இது தொடர்பாக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'' ஒருவரின் உரிமைக்காக மற்றுமொருவரின் உரிமையை மீற முடியாது " என்றும் அந்த அறிக்கையில் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு கூறுகிறது.

இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 650 சட்ட விரோத கருக்கலைப்புகள் இடம் பெறுவதாக களனி பல்கலைக்கழகத்தினால் கடந்த வருடம் மேற் கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :