சசிகலாவிற்கு கர்நாடக சிறைத்துறை விதித்த நான்கு நிபந்தனைகள் என்ன?

சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட வி.கே. சசிகலா, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை சந்திக்க 5 நாள் பரோலில் வெளியே வந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை KASHIF MASOOD

பரோலில் விடுக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு கர்நாடக சிறைத்துறை நான்கு நிபந்தனைகளை விதித்துள்ளது.

1. அவசரகால பரோல் அளிக்கப்பட்டுள்ள காலத்தில் சசிகலாவின் கணவர் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இல்லத்தில் மட்டுமே தங்க வேண்டும்.

2. இந்த அவசரகால பரோலின்போது சசிகலா நடராஜனை சந்திக்கவுள்ள மருத்துவமனையிலோ அல்லது தங்கவுள்ள இல்லத்திலோ எந்த வெளியாட்களையும் சந்திக்க கூடாது.

3. அவசரகால பரோலின்போது சசிகலா எவ்வித அரசியல் அல்லது மற்ற பொது நிகழ்வுகள் அல்லது கட்சி தொடர்பான விவகாரங்களில் பங்கேற்க கூடாது..

4. இந்த ஐந்து நாள் பரோல் காலத்தில் சசிகலா பத்திரிக்கை அல்லது மின்னணு ஊடகம் உள்ளிட்ட எவ்விதமான ஊடகத்தையும் சந்திக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :