இனவாதத்திற்கு எதிராக போராடிய இலங்கையின் சிவானந்தன் மறைவு

அம்பலவானர் சிவானந்தன் படத்தின் காப்புரிமை ROTA

தனது இனத்திற்காக போராட்டங்களை நடத்திய தலைசிறந்த சிந்தனையாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகரும், ஆசிரியரும், நியாயமான சமூகத்திற்காக போராடிய இலங்கை செயற்பாட்டாளருமான அம்பலவானர் சிவானந்தன் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உயிரிழந்தார்.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையில் பிறந்த சிவானந்தன், தனது 35ஆவது வயதில், அதாவது 1958ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலையினால் இலங்கையை விட்டு வெளியேறினார்.

தனது தாயகத்தை விட்டு வெளியேறிய சிவானந்தன், Institute of Race Relations(IRR) நிறுவனத்தில் நூலகராக இணைந்து, பின்பு அதனை மேம்படுத்தியதில் முக்கிய பங்காற்றினார்.

அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் பதவிக்கும், அந்த நிறுவனத்தினால் பிரசுரிக்கப்பட்ட Race (பின்னர் Race & Class) சஞ்சிகையின் ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றிருந்தார்.

பின்னர் பிரிட்டன் சமூகத்தில் காணப்பட்ட இனவாதத்திற்கு எதிராக குரல் எழுப்பும் முன்னணியாளராக அவர் திகழ்ந்திருந்தார்.

அவர் முன்னெடுத்த போராட்டங்கள் ஒரு இனத்திற்காக மாத்திரம் அல்ல என ROTA நிறுவனத்தின் Oral History திட்டத்திற்காக அம்பலவானர் சிவானந்தன் குறித்த வீடியோவை தயாரித்த பூர்ணிமா கருணாகராச்சரன் பிபி.சியிடம் தெரிவித்தார்.

"இவரே Politically Black என்ற சூழலை ஏற்படுத்தியிருந்தார். அனைத்து நிறங்களையும் தாண்டி சென்று, அரசியல் நிறம் தொடர்பில் அவர் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்" எனவும் பூர்ணிமா கூறினார்.

ROTA நிறுவனத்துடன் செயற்பட்ட தனது இளம் பருவத்தில் தெமட்டகொடை பகுதியில் சிவானந்தன் வசித்த வந்த போது, சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த சிறார்களுடன் கிரிக்கெட் விளையாடியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

பெரும்பாலானோர் அவரை எழுத்தாளர் அல்லது புத்திஜீவி என்ற அடிப்படையிலேயே அடையாளப்படுத்தியதாக கூறும் பூர்ணிமா கருணாகராச்சரன், சிவானந்தன் பல்வேறு துறைகளிலும் திறமை வாய்ந்தவர் என்றார்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்