வவுனியா அரச அதிபர் விளக்கம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 ஆகஸ்ட், 2011 - 12:36 ஜிஎம்டி

பிபிசி தமிழோசையில் ''1,000 சிறார்களைக் காணவில்லை: பெற்றோர் கண்ணீர்'' என்ற தலைப்பில் வெளியான செய்திகள் குறித்து வவுனியா அரசாங்க அதிபர் பி. எஸ். எம். சாள்ஸ் அவர்கள் விளக்கம் ஒன்றை வழங்கியுள்ளார்.

அந்தச் செய்தியின்படி இன்னமும் 1,000 சிறார்களைக் காணவில்லை என்ற அர்த்தம் தெரிந்ததாகக் கூறியுள்ள அவர் அதனை மறுத்துள்ளார்.

போர் முடிந்த பின்னர் சிறார்களைக் காணவில்லை என்று தமக்கு 684 முறைப்பாடுகள் கிடைத்ததாகத் தெரிவித்துள்ள அரசாங்க அதிபர், அதில் 600 பேர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் 29 பேர் அவர்களது குடும்பத்தினருடன் இணைந்து விட்டதாகவும், மீதமுள்ள 55 பேரைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் திருமதி சாள்ஸ் கூறியுள்ளார்.

இதற்கு அப்பால் 1980 ஆம் ஆண்டு முதல் 1888 வயதுவந்தவர்களைக் காணவில்லை என்ற முறைப்பாடுகளும் தமக்கு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அவர்களில் 64 வீதமானவர்களை விடுதலைப்புலிகள் பிடித்துச் சென்றதாக முறைப்பாடு செய்யப்பட்டதாக அரசாங்க அதிபரின் அறிக்கை கூறுகிறது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.