"பாரம்பரிய மீன்பிடி உரிமை என்ற வாதத்தைக் கைவிட இந்தியா சம்மதம்"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 ஜனவரி, 2012 - 17:12 ஜிஎம்டி
டிராலர் படகுகளில் இந்திய மீனவர்கள்

டிராலர் படகுகளில் இந்திய மீனவர்கள்

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு பாரம்பரிய ரீதியான உரிமை இருப்பதாக கூறிவந்த இந்திய தரப்பினர், தற்போது அந்தக் கோரிக்கயை விட்டுக்கொடுத்துள்ளதாக இலங்கை மீன்பிடித்தறை அமைச்சர் ராஜித சேனரத்ன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கை இடையே மீன்பிடி தொடர்பில் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக இந்திய, இலங்கை தரப்புகளை உள்ளடக்கி அமைக்கப்பட்ட குழுவின் கூட்டம் சனிக்கிழமையன்று கொழும்பில் நடந்தது.

இந்திய உயர்ஸ்தானிகர், இந்திய மீன்பிடித்துறை அமைச்சின் கூட்டுச் செயலர்கள் உள்ளிட்ட தரப்பினர், தமிழ்நாடு ஆந்திர மாநிலங்களின் மீன்பிடித்துறை ஆணையர்கL, இந்திய கடற்படை மற்றும் கடல்எல்லைக் காவல்படையினர், அதேபோல் இலங்கை தரப்பிலும் வெளியுறவு மற்றும் மீன்பிடித்துறை அமைச்சுகளின் பிரதிநிதிகள், யாழ் அரச அதிபர் போன்றோர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டனர்.

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு பாரம்பரிய உரிமை இருப்பதாக பலகாலமாக இந்தியா கோரிவந்த கூற்றை இம்முறை அது விலக்கிக்கொண்டுவிட்டதாக அமைச்சர் சேனரத்ன கூறினார்.

1960களில் இருந்து இது தங்களுக்கு இருந்துவரும் என்று இந்தியத் தரப்பில் வாதிடப்பட்டாலும், சர்வதேச கடல் எல்லை நியமங்கள் 1975 காலப்பகுதியில் வந்த பின்னர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை பாரம்பரிய உரிமையாக கருத முடியாது என்ற இலங்கையின் பதிலைக் கேட்டு, இந்தியப் பிரதிநிதிகள் தங்கள் வாதத்தை கைவிட சம்மதித்தனர் என்று சேனரத்ன தெரிவித்தார்.

கடலின் ஆழம் வரை துழாவி மீன்பிடிக்கும் படகுகளை தமிழ்நாட்டில் இனி புதிதாக தாங்கள் பதியசெய்யப் போவதில்லை என்றும், ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள இப்படியான படகுகளும் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பில்லாத மீன்பிடி முறைக்கு மாற்றப்படும் என்றும் இந்தியத் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனவிரத்ன பிபிசியிடம் கூறினார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.