ஐ.நா. தீர்மானம் வேண்டாம் எனக் கூறி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்த பதாதைகளில் ஒன்று
Image caption அமெரிக்க எதிர்ப்பு பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்

இலங்கைத் தலைநகர் கொழும்பில் இலங்கை அரசின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா.மன்றத்தில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர அமெரிக்கா திட்டமிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

2009ல் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் நடந்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றங்களை இலங்கை விசாரிக்க வேண்டும் என வற்புறுத்தும் தீர்மானத்தை அமெரிக்கா ஐ.நா.வின் மனித உரிமைகள் மன்றத்தின் முன்பு கொண்டுவந்துள்ளது.

ஐ.நா.மன்றம் இத்தீர்மானத்தை நிறைவேற்றுமானால் அது இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாய் அமையும் என இன்று ஆர்ப்பாட்டத்தை நடத்திய அரசாங்க ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.