எல்எல்ஆர்சி முன் சாட்சியமளித்த பெண் அச்சத்தில்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 ஏப்ரல், 2012 - 17:32 ஜிஎம்டி
இலங்கை காவல்துறை

இலங்கை காவல்துறை

இலங்கை அரசாங்கம் அமைத்த நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த கல்முனையைச் சேர்ந்த இரத்தினம் பூங்கோதை என்ற கணவனை இழந்தப் பெண், எதிர்வரும் சனிக்கிழமையன்று விசாரணைக்கு வரவேண்டுமென்று கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பரிவு கல்முனை பொலிஸ் ஊடாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர், குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது அவர் கொழும்பு செல்ல மறுத்தார்.

அதனையடுத்து, கல்முனையில் வாக்குமூலம் அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று ஆணைக்குழு அறிவித்திருந்ததுடன் குற்றப் புலனாய்வு பிரிவினரும் கல்முனையில் வாக்குமூலம் பெறப்படும் என தெரிவித்திருந்தனர்.

இப்போது கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் அழைத்திருக்கின்றமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு தான் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்த பூங்கோதை, ஏற்கனவே தான் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்ததையும் நினைவுகூர்ந்தார்.

தற்போது கொழும்பிற்கு சென்று வரக் கூடிய பாதுகாப்பான சூழ்நிலை தனக்கு இல்லை என்பதால் தன்னால் அங்கு செல்ல முடியாதிருப்பதாகவும் அவர் கூறினார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.