ஆணைக்குழு பரிந்துரைகள்: இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 மே, 2012 - 17:18 ஜிஎம்டி
அமைச்சர் டியூ குணசேகர

அமைச்சர் டியூ குணசேகர

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து தமது கருத்துக்களை முன்வைத்துள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மேலதிகமாக நாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாற்றுவது போன்ற அரசியலமைப்புத் திருத்தங்களையும் கோரியிருக்கிறது.

இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, ஆளும் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் தமது கருத்துக்களை அரசிடம் முன்வைத்து வருகின்றன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான யோசனையின் போது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றுவது, தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவருவது போன்ற அடிப்படை அரசியலமைப்பு விடயங்கள் பற்றி ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்கிடையில் ஏற்படக்கூடிய கருத்து முரண்பாடுகள், அங்கு எந்தளவுக்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்தும் என்று ஆளும் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டியூ குணசேகரவிடம் தமிழோசை கேள்வி எழுப்பியது.

அமைச்சர் டியூ குணசேகர பேட்டி

எல்எல்ஆர்சி: அமைச்சர் டியூ குணசேகரவின் யோசனை

'நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மேலதிகமாக நிறைவேற்று ஜனாதிபதி முறையையும் மாற்ற வேண்டும்': அமைச்சர் டியூ குணசேகர

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

அதற்குப் பதிலளித்த அமைச்சர் டியூ குணசேகர, ஊடகங்களே இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வுக்கு முக்கிய தடையாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இலங்கைப் பிரச்சனையை ஒவ்வொரு கோணங்களில் அணுகுவதாகவும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழு

இலங்கையில் யுத்தம் முடிந்த சூழ்நிலையில், அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றி ஐநாவின் நிபுணர் குழுவும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

ஐநாவின் தலைமைச் செயலர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் இந்த நிபுணர் குழுவின் அறிக்கைக்கு இலங்கையிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.

இந்த நிலையில், இலங்கை ஜனாதிபதியால் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த நல்லிணக்க ஆணைக்குழு, நாட்டின் பல இடங்களிலும் விசாரணை அமர்வுகளை நடத்தியபின், அறிக்கையொன்றை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கை இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி, நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை உரியமுறையில் நடைமுறைப்படுத்துமாறு ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.