யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்க செயலாளர் மீது தாக்குதல்

தாக்குதலுக்கு உள்ளான மாணவர்
Image caption தாக்குதலுக்கு உள்ளான மாணவர்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்ஷானந்த் (24 வயது) அடையாளம் தெரியாதவர்களினால் தாக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கலட்டிச் சந்தியில் வைத்து இவர் ஆயுததாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பலத்த காவலும், ஆட்கள் நடமாட்டமும் உள்ள இந்த இடத்தில் வைத்து இவர் தாக்கப்பட்டமை அங்கு பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தற்போது யாழ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைப் போரின் இறுதி நாட்களில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதையொட்டி, அந்த அழிவுகள் ஏற்பட்ட மூன்றாவது ஆண்டு தினத்தை அனுட்டிக்கும் வகையில் யாழ். பல்கலைக்கழகத்தில் நடக்கவிருந்த நிகழ்வு ஒன்றுக்கு சென்றுகொண்டிருந்த வேளையிலேயே இவர் தாக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இதற்கு முன்னரும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தலைவர் ஒருவரும் இவ்வாறு தாக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தர்ஷானந்த் தாக்கப்பட்டதைக் கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள். தமக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளார்கள்.