'இராணுவ முகாம்களை அகற்ற முடியாது': மகிந்த

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 மே, 2012 - 16:49 ஜிஎம்டி
3வது போர் வெற்றி விழாவில் ஜனாதிபதி மகிந்த

3வது போர் வெற்றி விழாவில் ஜனாதிபதி மகிந்த

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததைக் கொண்டாடும் மூன்றாவது ஆண்டு வெற்றிவிழா மேடையில் பேசிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது என்று தெரிவித்தார்.


2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதியுடன் முடிவுக்கு வந்தததாக அறிவிக்கப்பட்ட இலங்கைப் போரின் வெற்றி விழாக் கொண்டாட்டம் இந்த ஆண்டும் கொழும்பு காலி முகத்திடலில் பெரும் ஆரவாரத்துடன் நடத்தப்பட்டது.

' ஈழக் கோரிக்கை தொடர்கிறது': மகிந்த

போர் வெற்றி விழா மேடையில் ஜனாதிபதி மகிந்த

வடக்கு-கிழக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது, நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளில் சாத்தியமானவையே அமுல்படுத்தப்படுகின்றன என்கிறார் மகிந்த

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க


வடக்கில் மக்களின் சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையிடுவதில்லை என்று இங்கு கூறிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, 'இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று குரல் எழுப்புபவர்கள், வெளிநாடுகளில் புலம்பெயர் சமூகத்தினர் ஈழம் கோருவதை இன்னும் கைவிடவில்லை என்பதை உணரவேண்டும்' என்றும் தெரிவித்தார்.

நிலமை வழமைக்குத் திரும்பிவிட்டது என்பதற்காக வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதால் தேசிய பாதுகாப்புக்கு உள்ள அச்சுறுத்தலை குறைக்க முடியாது என்றும் ராஜபக்ஷ கூறினார்.


முப்படைகளின் அணிவகுப்புகள், இராணுவ வாகன பேரணிகள் என களைகட்டியிருந்த விழாவில் 21 பீரங்கி குண்டுகளும் தீர்க்கப்பட்டு வெற்றி கொண்டாடப்பட்டது.

நல்லிணக்க ஆணைக்குழு


இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகளில் தம்மால் இணங்கக்கூடிய விடயங்களை தாங்கள் நடைமுறைப்படுத்திவருவதாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ இங்கு தெரிவித்தார்.


நல்லிணக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஆணைக்குழு இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்த இடங்கொடுக்க முடியாது என்றும் மகிந்த ராஜபக்ஷ கூறினார்.


இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய வீடமைப்புத் திட்டத்தை இலங்கை இராணுவப் படையினருக்காக தாம் அமைத்துக்கொடுத்துள்ளதாகவும் இலங்கை ஜனாதிபதி வெற்றிவிழா மேடையில் பெருமைப்பட்டார்.


இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கென அமைக்கப்பட்ட பள்ளிக்கூடம் இலங்கையில் மிகச்சிறந்த பள்ளிக்கூடமான இன்று இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.