'நிமலரூபனின் மரணச்சடங்கு கௌரவமாக நடக்கவேண்டும்'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 ஜூலை, 2012 - 11:48 ஜிஎம்டி
சொந்த இடமான வவுனியாவில் மகனின் சடலத்தை நல்லடக்கம் செய்ய அனுமதிகோருகிறார் நிமலரூபனின் தாயார்

சொந்த இடமான வவுனியாவில் மகனின் சடலத்தை நல்லடக்கம் செய்ய அனுமதிகோருகிறார் நிமலரூபனின் தாயார்

வவுனியா சிறைச்சாலை போராட்ட சம்பவத்தின் பின்னர் அங்கிருந்து அனுராதபுரம் சிறை, அதன்பின்னர் மகர சிறைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொல்லப்பட்ட தமிழ்க் கைதி நிமலரூபனின் இறுதிச் சடங்குகளை கௌரவமான முறையில் நடத்த அனுமதியளிக்குமாறு இலங்கை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

நிமலரூபனின் சடலத்தை மகர எல்லைக்குள் அடக்கம் செய்யவேண்டும் என்ற கடவத்தை நீதவானின் உத்தரவை எதிர்த்து, தனது மகனின் உடலை தமது சொந்த இடமான வவுனியாவில் நல்லடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்குமாறு அவரது பெற்றோர் தாக்கல்செய்திருந்த மனுமீதான பரிசீலனையின்போதே, உச்சநீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது.

இந்த மனுமீதான விசாரணையின்போது கருத்துதெரிவித்த அரசதரப்பு வழக்குறைஞர், இந்த மரணச்சடங்கினை சில சக்திகள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் பயன்படுத்தக்கூடும் என்று கூறியிருந்தார்.

எனினும் நிமலரூபனின் பெற்றோர், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, மரணச்சடங்கை சுமுமாக நடத்த இணக்கம் தெரிவித்தால் உடலை ஒப்படைப்பதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்படமாட்டாது என்றும் அரசதரப்பு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர், வழக்கு விசாரணையை வரும் 20-ம் திகதிவரை ஒத்திவைத்த தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, மரணச்சடங்கினை வவுனியாவில் நடத்துவதற்கு அனுமதி வழங்குவது குறித்த அரசாங்கத்தின் இறுதி தீர்மானத்தை அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.